தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் வெங்காயம்! - அதிகரிக்கும் வெங்காயம் விலை

தருமபுரி: உள்ளூர் சந்தையில் வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக, வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உரிக்காமலே கண்ணீர் வரவைக்கும் வெங்காயம்!
உரிக்காமலே கண்ணீர் வரவைக்கும் வெங்காயம்!

By

Published : Oct 20, 2020, 12:40 PM IST

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் கிலோ 20 ரூபாய்வரை விற்பனையான தக்காளியின் விலை, இன்று திடீரென கிலோ 8 ரூபாயாக குறைந்துள்ளது.

தக்காளியின் வரத்து அதிகரித்ததால் விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தையில் சிறிய வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உள்ளூர் சந்தையில் வெங்காய வரத்து குறைவு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காய விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் குறைந்த அளவே வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details