இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக காய்கறிகள், மருந்தகங்கள், பழங்கள், மீன், இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தர்மபுரி நகரப் பகுதியில் பொதுமக்கள் காலை நேரங்களில் அதிகளவில் கூடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, நாளை முதல் தர்மபுரி நகரப்பகுதி சுற்றியுள்ள இடங்களில் காய்கறி, பழங்க்ள் இறைச்சி விற்கும் கடைகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் மலர்விழி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.