தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொப்பூர் - மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.13.62 கோடி நிதி - தர்மபுரி எம்.பி. தகவல்! - NHAI

தொப்பூர் - மேட்டூர் இடையில் மோசமான நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அரசு ரூ.13.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி எம்.பி. தகவல்
தர்மபுரி எம்.பி. தகவல்

By

Published : Jul 21, 2021, 8:19 PM IST

தர்மபுரி: தொப்பூர் - மேட்டூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கி உள்ளதாக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பூர் - பவானி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை இருப்பதாகவும், சாலையை பயன்படுத்துவதில் மிகவும் சிரமம் இருப்பதாகவும் பொதுமக்கள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

அந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். தொடர்ந்து, ஒன்றிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு கடிதம், தொலைப்பேசி வாயிலாக வலுயுறுத்தி வந்தார்.

ஜூலை 1ஆம் தேதி சாலையை ஆய்வு செய்ய வந்த, ஒன்றிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவர்களுடன் சென்று ஆய்வு செய்து சாலையை விரைவில் சீரமைக்க வலியுறுத்தினார்.இந்தநிலையில், நேற்று (ஜூலை 20) தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஆணையத்தின் தலைவரை நேரில் சந்தித்து தொப்பூர் - மேட்டூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும், அந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை, ரூ.13.62 கோடிக்கான நிதியினை மாநில நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வழிப்பாதை தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி கைது

ABOUT THE AUTHOR

...view details