மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை ஏற்க மறுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மனு அளித்துள்ளனர். இம்மனுவில் மத சிறுபான்மையினர் உடைய உரிமைகள் நலனுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்பன உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல குறைகளை சுட்டிக்காட்டி பல திருத்தங்களை முன்மொழிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம்! - பொள்ளாச்சி
தருமபுரி: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
protest
இதேபோல் சென்னை சேப்பாக்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது.