தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதல்முறை: 130 அடி உயரத்தில் பறந்த தேசியக்கொடி - தேசியக் கொடி

தருமபுரி: தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள தருமபுரி ரயில் நிலையத்தின் முகப்பில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ராட்சத கொடிக்கம்பம் அமைத்து தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தேசியக் கொடி
தேசியக் கொடி

By

Published : Jun 20, 2020, 7:52 PM IST

நாட்டு மக்களிடையே தேசப்பற்றை வளர்க்கவும், தேசியக்கொடியின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய ரயில் நிலையங்களில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ராட்சத கொடிக்கம்பங்கள் அமைத்து தேசியக்கொடிகளை ஏற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகமான யஷ்வந்த்பூர், மெஜஸ்டிக் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கொடிக்கம்பம் அமைத்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள தருமபுரி ரயில் நிலையத்தின் முகப்பில் மாநிலத்திலேயே முதன்முறையாக ராட்சத கொடிக்கம்பம் அமைத்து தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சுமார் 130 அடி உயரம் கொண்ட கம்பத்தில் மிகப்பெரிய தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது. கொடிக்கம்பத்தில் மோட்டார் பொருத்தப்பட்டு மோட்டார் மூலம் கொடி ஏற்றப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details