தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேளதாளத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! - Naam Tamilar Party Candidate Nomination filed with Mela Dalam in Dharmapuri

தருமபுரி: நாம் தமிழர் கட்சியினர் மேளதாளம் முழங்க உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Nomination filed with Mela Dalam in Dharmapuri
Nomination filed with Mela Dalam in Dharmapuri

By

Published : Dec 14, 2019, 10:17 AM IST

தருமபுரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில், வருகிற 27ஆம் தேதி நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட பல வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊராட்சி குழு வார்டு எண் 9 இல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

மேளதாளத்துடன் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் சீனிவாசன்

அப்போது, அவர் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை மேளதாளம் முழங்க வந்து வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க:

புதுவையில் குடியுரிமைச் சட்டம் இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details