தர்மபுரி: திமுகவைச் சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவா் செந்தில்குமார் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆனவர். எதிர்கட்சிகளுக்கு கருத்துக்களை தெரிவிப்பதிலும் சமூக வலைதளத்தில் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதிலும் முன்னிலையில் இருக்கிறார்.
கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தர்மபுரி திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, லூலூ நிறுவனத்தின் இயக்குநர் யூசுப் அலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.