தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பென்னாகரம் அருகே பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!

தர்மபுரி: பென்னாகரம் அருகே 5 வயது பெண் பிள்ளையுடன் தாய், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother commits suicide by jumping into well with 5-year-old girl near Pennagaram
Mother commits suicide by jumping into well with 5-year-old girl near Pennagaram

By

Published : Sep 30, 2020, 7:43 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள சின்னூர் கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி சுந்தரேசன் (28). இவரது மனைவி செந்தாமரை (25). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லாவண்யா (7), மோனிகா (5) என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதியர் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செந்தாமரை, வீட்டின் அருகேவுள்ள விவசாயக் கிணற்றில், தனது இரண்டாவது மகள் மோனிகாவுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த பென்னாகரம் தீயணைப்புத் துறையினர், கிணற்றிலிருந்து தாய் மற்றும் பிள்ளையின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் காவல்துறையினர், பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கிணற்றில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலனுடன் மகள் சென்றதால் ஆத்திரம் - வீடு சூறை

ABOUT THE AUTHOR

...view details