தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் - வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர்

மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு
எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு

By

Published : Jul 2, 2022, 7:48 PM IST

தர்மபுரி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் ”நான் முதல்வன்” கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது . இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், "நான் படிக்கும்போது டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எனக்கு படிப்பு குறைவு. படிக்கும் ஆற்றல் குறைவாக இருந்ததாலும் தன்னம்பிக்கை இருந்தது. அதனாலேயே அமைச்சரானேன். அதுதான் என் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அந்தத் திறமையை நானே உருவாக்கிக் கொண்டேன். இதுபோல மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்

எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு

பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் இந்த படிப்பைதான் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், மாணவர்களின் விருப்பம் வேறு மாதிரியாக இருக்கும். சில மாணவா்களின் பெற்றோர்களுக்கு அறிவியல் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.

கட்டாயத்தால் படித்தால் மாணவர்களால் படிக்க முடியாது. படிப்பு தேர்ந்தெடுக்கும் பொழுது தெளிவான பாட பிரிவுகளை தோ்ந்தெடுத்து படித்தால்தான் முன்னேற முடியும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'ரூபிக்ஸ்' கன சதுர விளையாட்டில் உலக சாதனைப்படைத்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details