தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரி சேர்க்கை இணையதள பதிவு வாயிலாக தொடங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை கடந்த மே மாதம் 2ஆம் தேதியில் தொடங்கி 31ஆம் தேதி வரை பதிவு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவ மாணவிகள் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். ரேண்டம் எண் ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொறியியல் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று கூறினார்.
கலந்தாய்வு சந்தேகத்திற்கு தொலைபேசி எண் அறிவிப்பு: கேபி அன்பழகன் - பொறியியல் கலந்தாய்வு
தருமபுரி: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு குறித்த சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார்.
சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 46 சேவை மையங்களில் நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பதிவு செய்த மாணவர்கள் எந்த நாளில் வரவேண்டும் என்ற விவரத்தினை மாணவர்கள் விண்ணப்பத்தோடு பதிவு செய்த இமெயில், முகவரி மற்றும் செல்லிட பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று 23 ஆயிரம் மாணவ மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு அனுப்பப்பட்டது, ஆனால் 18 ஆயிரம் மாணவ மாணவியர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பில் சந்தேகம் உள்ளவர்கள் சென்னை அலுவலக எண்ணிற்கு - 04422351014, 04422351015 தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.