வருகின்ற திங்கட்கிழமை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அதரித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இன்று பந்தாரஅள்ளி, திண்டல்,பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின்போது பேசிய அவர், காரிமங்கலம் பகுதியில் நீதிமன்றம் அமைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது. விரைவில் நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
காரிமங்கலம் பகுதியில் கே.பி. அன்பழகன் தேர்தல் பரப்புரை மக்களின் கோரிக்கைகளை ஏற்று பாலக்கோடு பகுதியிலிருந்து காரிமங்கலம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அதிமுக அரசு பந்தாரஅள்ளி பகுதியில் அமைந்துள்ள பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளது என்றும் ஒருவழிப்பாதையாக இருந்த பந்தாரஅள்ளி ஏரிக்கரைச் சாலையை இரண்டு வழிப்பாதையாக மாற்றி அகலப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுக அரசுக்கு ஆதரவளிக்கும் விதமாக அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்; கடைசி நாள் வாக்கு சேகரிப்பு - அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரை