தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நானும் நேரடியாக பாதிக்கப்பட்டேன், மக்கள் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது!'

தருமபுரி: கரோனாவால் பாதிக்கப்பவன் என்ற முறையில் சொல்கிறேன், மக்கள் கரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

minister anbalagan
minister anbalagan

By

Published : Sep 25, 2020, 11:10 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கல, பாலக்கோடு பகுதிகளில் இரண்டு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தும், முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தும் பேசினார்.

அதில், "கரோனா தொற்று ஆரம்ப காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் குறைவாக இருந்தாலும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்று குறித்து அச்சமில்லாமல் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நான் கரோனா தொற்றால் பாதித்தவர் என்ற முறையில் கூறுகிறேன்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களையும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளையும் பின்பற்றி கரோனா தொற்றைத் தடுக்க வேண்டும்.

தகுந்த இடைவெளி கட்டாயம் கடைப்பிடிப்பது, அவசியம் முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:சாகாவரம் பெற்ற பாடல்களை பாடியவர் எஸ்பிபி - செல்லூர் ராஜூ இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details