தருமபுரியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. ‘பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின் அடுத்து என்ன?’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.
இந்தக் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, வருமான வரித் துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.