தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் மாட்டுப் பொங்கல் பண்டிகையின்போது விநாயகர் மற்றும் திரௌபதி அம்மன் கோயில்களின் முன்பு மாடு, எருமை போன்ற கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில்களை திறக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக மாடுகளை ஒன்றுசேர்த்து வழிபாடு நடத்துவதை ஊர் முக்கியஸ்தர்கள் தவிர்த்தனர். கால்நடை வளர்ப்பவர்கள் காலம் காலமாக தொன்று தொட்டு வரும் நடைமுறையை மாற்றக்கூடாது என்பதால் தனித்தனியாக தங்கள் கால்நடைகளை கோயில்கள் முன்பு நிறுத்தி வழிபாடு செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:முட்டி மோதும் மூவர்... அதிமுக மேயர் வேட்பாளர் யார்?