தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்காலத்து தங்க துகள்கள் - பெண் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி - பெண் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

தங்க துகள்களைப் பாதிக்கு பாதி விலையில் தருவதாகக் கூறி, பெண் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் பணமோசடி செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பழங்காலத்து தங்க துகள்கள்
பழங்காலத்து தங்க துகள்கள்

By

Published : Mar 22, 2022, 7:54 PM IST

தருமபுரி:அதியமான் கோட்டையைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை அணுகிய வெங்கடேசன் என்ற நபர், தனக்கு புதையலில் பழங்காலத்து தங்க துகள்கள் கிடைத்துள்ளதாகவும், இன்றைய மதிப்பை விட குறைந்த விலையில் விற்பனை செய்ய இருப்பதாக கூறி நம்பவைத்து, 5 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

தங்க துகள்களை உரசி பார்த்த போது அது தங்கம் இல்லை முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என தெரியவந்துள்ளது. ஏமாற்றமடைந்த அனிதா காவல்துறையினர் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குடியாத்தத்தை சேர்ந்த மோசடி நபர் வெங்கடேசன்(32) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 5 லட்ச ரூபாய் பணம், 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்த தருமபுரி நகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைதாகியுள்ள வெங்கடேசன் இதே போல் பல இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:அகிலேஷ் யாதவ் ராஜினாமா!

ABOUT THE AUTHOR

...view details