தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகில இந்திய வானொலியில் 4 மணி நேரம் உள்ளூர் நிகழ்ச்சிகள் வழங்கப்படும் - எல்.முருகன் தகவல் - தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி அகில இந்திய வானொலி நிலையம் இரவு 11.20 வரை ஒளிபரப்பு நீட்டிக்கும், நான்கு மணி நேரம் உள்ளூர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கப்படும் என தருமபுரி எம்.பி-க்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

அகில இந்திய வானொலியில் 4 மணி நேரம் உள்ளூர் நிகழ்ச்சிகள் வழங்கப்படும்- எல்.முருகன் தகவல்
அகில இந்திய வானொலியில் 4 மணி நேரம் உள்ளூர் நிகழ்ச்சிகள் வழங்கப்படும்- எல்.முருகன் தகவல்

By

Published : Dec 28, 2022, 10:57 PM IST

தருமபுரி:நல்லம்பள்ளி அதியமான் கோட்டையில் அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தர்மபுரி, சேலம், நாமக்கல் ஈரோடு, கிருஷ்ணகிரி, கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகள் திருப்பூர் உள்ளிட்ட பகுதி நேயர்களைச் சென்றடைந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தர்மபுரி வானொலி சென்னை வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யும் நிலையமாக மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. தகவலையடுத்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களை நேரில் சந்தித்து தர்மபுரி வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் தருமபுரி நிலையத்தில் இருந்து தயாரித்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

இம்மாவட்ட மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளதால் விவசாய செய்திகள் மற்றும் இளைஞர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் உள்ளூர் நிகழ்ச்சிகளாகத் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் ஒளிபரப்பு நேரத்தைக் குறைக்கக் கூடாது என்று கடிதம் வழங்கியிருந்தார்.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் கடிதத்திற்குப் பதில் அளித்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தருமபுரி அகில இந்திய வானொலி நிலையம் அஞ்சல் நிலையமாக மாற்றும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்றும், வானொலி தேசிய மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

காலை5.53 மணி முதல் இரவு 11.20 வரை தற்போது ஒளிபரப்பாகி வருவதாகவும் இதில் நான்கு மணி நேரம் உள்ளூர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க பிரசார் பாரதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எம்.பி செந்தில்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:பொங்கல்: ஊருக்கு கிளம்பணுமா..? நாளை முன்பதிவு எத்தனை மணிக்கு தொடங்குது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details