தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் - கே.எஸ்.அழகிரி விமர்சனம் - அரசியல் கோமாளி அண்ணாமலை

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி பிரதிநிதி போல், பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 31, 2022, 8:58 AM IST

தர்மபுரி:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (அக்.30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , 'தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் ரவி, ஒரு அரசியல் கட்சி பிரதிநிதி போல், பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்.

எடப்பாடி, எப்படி மோடி முன் கைகட்டி, வாய் பொத்தி நின்றாரோ, அப்படியே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் தான், இந்த ஆட்சியின் மீது போர் தொடுக்கிறார். இதனை, காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

விளம்பரம் தேடும் அண்ணாமலை: பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய தலைவர்போல் பேசி, ஒரு விளம்பரத்தை தேடிக் கொள்வதோடு தொடர்ந்து பத்திரிகையாளர்களை அநாகரீகமாக பேசி வருகிறார். கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அரசியல் செய்யவே, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறாக அண்ணாமலை பேசி வருகிறார். கோவை சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது.

ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் - கே.எஸ்.அழகிரி விமர்சனம்

அரசியலுக்காக பேசுவதா?: காவல்துறை திமுகவின் மற்றொரு அலுவலகமாக செயல்படுகிறது என்ற அண்ணாமலையின் கேள்விக்கு, காவல்துறை முந்தைய காலங்களை விட, தற்போது சுதந்திரமாக செயல்படுகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை நன்றாக கையாளுகிறார்கள். அண்ணாமலை ஆதாரமில்லாமல், அரசியலுக்காக பேசுகிறார்.

அரசியல் கோமாளி என்ற மொழியில், அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது தான் சரியானது. எங்களை மாதிரி நல்ல முறையில் பேசினால் சரியாக இருக்காது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலை வதந்திகளை பரப்புகிறார்... காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்... தமிழ்நாடு காவல்துறை...

ABOUT THE AUTHOR

...view details