கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ஸ்ரீனிவாசன், முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 51 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார்.
இவர் ஏற்கனவே கரோனா முதல் அலையின் போது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியற்றும் காவல் துறையினருக்கு கரோனா நிவாரண மளிகை பொருள்களை வழங்கினார். தற்போது இரண்டாவது அலை காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துவருகிறார்.