தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது தட்சிண காசி கால பைரவர் ஆலயம். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தளத்திற்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இன்று (ஜூலை.20) தேய்பிறை அஷ்டமி தினம் என்பதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.