தர்மபுரி தொழிலதிபர் டி.எம்.சி. இளங்கோவனுக்குச் சொந்தமாக தர்மபுரி, ஒசூர் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும் டி.என்.சி. சிட்பண்ட் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திவருகிறார்.
தர்மபுரியில் அமைச்சரின் சம்பந்திக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் சோதனை! - IT raid at industrial minister relative school
17:48 March 27
தர்மபுரி: தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சம்பந்திக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்திவருகிறது.
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் முக்கியப் பதவியிலும் தனியார் பள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துவருகிறார். இவர் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி ஆவார்.
கடந்த இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் வருமானவரி சோதனை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் தர்மபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள இளங்கோவனுக்குச் சொந்தமான பள்ளியில் வருமானவரித் துறையின் சோதனை நடைபெற்றுவருகிறது.
பள்ளி முடித்து வெளியில் செல்லும் ஆசிரியர்களிடமும் தீவிர சோதனை செய்த பிறகு வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கடந்த சில நாள்களாகவே வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.