தருமபுரி பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி பகுதி காவல்துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கும்மனூர் அருகே ஒருவர் தனியாக துப்பாக்கியுடன் சென்ற சுற்றித்திரிந்தவரை கண்ட காவலர்கள், சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது! - காட்டு விலங்குகளை வேட்டையாட
தர்மபுரி: பாலக்கோடு அருகே இரவில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவரை ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவிந்தராஜ்(55)
அதற்கு அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர், ராசிகுட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(55) என்பதும், நரிக்குறவர்களிடம் இருந்து காட்டு விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை வாங்கியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த காவலர்கள், கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.