தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல்: இருவர் கைது! - vehicle confiscated

பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி பகுதியில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளியதற்காக இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் இரண்டு டிராக்டர்கள், ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மண் கடத்தல்
மண் கடத்தல்

By

Published : Oct 2, 2020, 12:09 AM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி அரசு மாதிரி பள்ளி அருகே அரசுப் புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளப்படுவதாகப் பென்னாகரம் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டாட்சியர் சேதுலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் ஆய்வுசெய்தபோது இரண்டு டிராக்டர்களில் ஜேசிபி எந்திரம் உதவியுடன் மண் அள்ளப்பட்டிருந்தது கண்டறிந்தனர்.

அதுசமயம் மண் திருட்டு தொடா்பாக வட்டாட்சியர் பெரும்பாலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் அங்கு வந்த இரண்டு டிராக்டர்களையும், மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

மேலும் மண் கடத்தலில் ஈடுபட்ட செந்தில் (55) சின்னம்பள்ளியைச் சேர்ந்த செல்வம் (45) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். பின்னர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details