தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு: மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது! - கொலை

தர்மபுரி: திருமணத்தை மீறிய உறவு குறித்து மனைவிக்கு தெரிந்ததால், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்த கணவன்
கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது!

By

Published : Apr 10, 2021, 5:58 PM IST

கர்நாடகா மாநிலம், வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த வாரம், கணவன் மனைவி இருவரும், ஒசூரில் நடைப்பெற்ற திருவிழாவில் பங்கேற்க உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரவீன்ரகுமார் தனது நண்பரிடம் மனைவிக்கு உடம்பு சரியில்லை எனக்கூறி ஆம்புலன்சில் மனைவியை ஏற்றிக்கொண்டு, சாந்தாவின் ஊரான கோலார் பகுதிக்கு சென்று, சாந்தாவின் பெற்றோரிடம், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறி, உடலை கொடுத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

சாந்தாவின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், சாந்தாவின் உடலை மீண்டும் ஒசூருக்கு எடுத்து வந்து காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்டு ஒசூர் நகர காவல் துறையினர், உடலை உடற்கூராய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாகி இருந்த பிரவீன்குமாரை கைது செய்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில், சாந்தாவை பிரவீன் குமார் கொலை செய்தது தெரிய வந்தது. பிரவீன்குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருந்தது சாந்தாவிற்கு தெரிந்ததால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் திட்டமிட்டு சாந்தாவைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் வன்முறை: நான்கு பேர் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details