கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக மழைப் பொழிவு குறைந்திருந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அளவு தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பெய்யும் தொடர்மழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
ஒகேனக்கல்: நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக உயர்வு! - hogenakkal falls water level increased
தருமபுரி: ஒகேனக்கலுக்கு நேற்றுவரை 9 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், இன்று 4 அடி உயர்ந்து 13 ஆயிரம் அடியாக நீரின் அளவு உள்ளது.
joge
நேற்று பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று 4 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்து 13 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.