தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்துவருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு!
தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருவதால், நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
falls
கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து ஆறு ஆயிரத்து 69 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து ஐந்து ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இன்று (செப்.16) 4 ஆயிரம் கன அடி நீர் உயர்ந்து தற்போது வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.