காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. தொடர்மழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடி லிருந்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல் நீர்வரத்து அதிகாரிப்பு: பரிசல் இயக்க தடை - ஒகேனக்கல் பரிசல் இயக்க தடை
தருமபுரி: ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவித்துள்ளது.
water falls
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஒகேனக்கல் பகுதியில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சீரமைப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் 120 வது நாளாக குளிக்கவும் தடை விதித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறை மாவட்ட காவல்துறை ஊர்க்காவல் படையினர் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.