தர்மபரி:மத்திய பிரதேசத்தில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் ஹெராயின் கடத்துவதாக மதுரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று (மே 01) அதிகாலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் நல்லம்பள்ளி தாசில்தார் ஆகியோர் தர்மபுரி தொப்பூர் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தனர். காவல் துறையினரைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த இரண்டு பேர் தப்பியோட முயன்றனர். ஆனால் காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த காரில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.