தருமபுரி மாவட்டத்தில் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக தொடர் சாரல் மழை பெய்து, கடந்த மூன்று நாள்களாக மழைப்பொழிவு இல்லை, தற்போது பனி பொழிய தொடங்கியுள்ளது.
பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட மலைப் பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு கிராமப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஒரே பனிமூட்டமாக காணப்படுகிறது.