தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இதமளித்த கோடை மழை - விவசாயிகள் மகிழ்ச்சி - கனமழை பெய்து வருவதால்

தருமபுரி: பல நாட்களுக்குப் பிறகு தருமபுரியில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதமளித்த கோடை மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

By

Published : May 29, 2019, 7:52 AM IST

பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி நகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இம்மாவட்டத்தில் மழை குறைவின் காரணமாகப் பொதுமக்கள் குடிதண்ணீருக்கு மிகவும் அவதிப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கால்நடைகளுக்கு போதிய உணவு இன்றி பல விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்றுவருகின்றனர். கடந்த இரு நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது.

இதனால் கால்நடைகளுக்குத் தேவையான தீவன புல் முளைக்க மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரியில் பகல் பொழுதில் வெப்பநிலை 102 டிகிரி வரை பதிவாகிறது. பகலில் வெயில், இரவில் மழை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details