கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. தருமபுரி நான்கு ரோடு பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, போக்குவரத்து காவல் துறையினர் பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான ரசீதுகளை தருமபுரி நகராட்சி அலுவலர்கள் வழங்கினர்.
இந்நிலையில் நேதாஜி பைபாஸ் ரோடு ஆறுமுக ஆசாரி தெரு பகுதிகளில் உள்ள நகைக்கடை, துணிக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது சித்த வீரப்ப செட்டி தெரு பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி ஆய்வு மேற்கொள்ள சென்றார். மேலும் ஆய்வுக்கு சென்ற வருவாய் கோட்டாட்சியரை கடை ஊழியர் நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, தெர்மல் ஸ்கேன் செய்த பிறகுதான் உங்களை உள்ளே அனுமதிப்பேன் என்று கடை ஊழியர் விடாப்படியாக தெரிவித்தார்.
முதியவருக்கு கோட்டாட்சியர் முககவசம் வழங்கும் காட்சி பின்னர், வருவாய் கோட்டாட்சியர் வரிசையில் நின்று ஸ்கேனர் கருவியில் சோதனை செய்த பின்பு கடையின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். கடை ஊழியர் வருவாய் கோட்டாட்சியரிடம் கடுமையாக நடந்து கொண்டதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிற துணி கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடைகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும், கடை உரிமையாளர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்தனர்.
தர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர் அதுபோல நான்கு ரோடு வழியாக முகக்கவசமின்றி சென்ற முதியவர்களுக்கு கோட்டாட்சியர் தேன்மொழி இலவசமாக தன் சொந்த செலவில் முகக்கவசங்கள் வழங்கி, முகக்கவசங்கள் அணிந்து வெளியே வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:கரோனா அச்சம்: அனுமதியிருந்தும் இரு விழுக்காடு ஊழியர்களோடு இயங்கும் டைடல் பார்க்!