தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம்:நிலம் கையடுக்கப்படுத்தும் பணிக்கு ரூ.50 கோடி விடுவிப்பு - எம்.பி செந்தில்குமார்! - land acquisition work

Dharmapuri - Morappur Railway Project: தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு, நிலம் கையடுக்கப்படுத்தும் பணிக்கு முதல் கட்டமாக ரூ.50 கோடி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தருமபுரி எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம்
தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 6:14 PM IST

தருமபுரிமாவட்ட மக்களின் 80 ஆண்டு கால கனவு திட்டம் தருமபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம். இத்திட்டத்திற்காக 2023 மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலங்கள் அளவிடப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு நிலத்திற்கான தொகை நிர்ணயம் செய்யும் பணிகள் முடிவடைந்தன.

அதைத் தொடர்ந்து, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சதன் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்- ஐ சந்தித்து, ரயில் திட்டத்திற்கு நில அளவை பணிகள் முடிவடைந்தது குறித்து தெரிவித்து, நிலத்திற்கான தொகையை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில், நில அளவைப் பணி மற்றும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.50 கோடியை, முதல் கட்டமாக ரயில்வே துறை விடுவித்து உள்ளது. மேலும், தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கோரிக்கையான, கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி - பெங்களூர் எக்ஸ்பிரஸ், பொம்மிடி ரயில் நிலையத்திலும், சென்னை - திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் கோயமுத்தூர் - திருப்பதி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், மொரப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டுமென தெற்கு ரயில்வே மேலாளரை நேரடியாக சந்தித்து தருமபுரி எம்.பி செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தற்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை சென்று வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மொரப்பூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, முக்கியமான ரயில்களை மொரப்பூர் மற்றும் பொம்மிடி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்று பலமுறை மத்திய அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு, கடிதத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளதையும் அதிகாரியிடம் அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ஈரோட்டில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு; எதிர்ப்பு தெரிவித்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details