தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குப்பாங்கரை காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(36). இவரது வீட்டில் சட்ட விரோதமாக வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய ஆசாமி சிறையிலடைப்பு! - தருமபுரி
தருமபுரி: காரிமங்கலம் அருகே வீட்டில் ரகசியமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வீட்டில் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த ஆசாமி கைது
இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், செந்தில்குமாரின் வீட்டை சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் நாட்டுத்துப்பாக்கிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல் துறையினர், செந்தில் குமாரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.
தான் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியதாக செந்தில் குமார் தெரிவித்தார். பின்னர் காவல்துறையினர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.