தர்மபுரி:நல்லம்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர். எடப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஏராளமானோர் ஆடு வாங்க வருவார்கள் என நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சிறிய ஆடு 3 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய்வரை விலை நிர்ணயம் செய்தனர்.