தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் முறைகேடாகச் சான்றிதழ் சமர்ப்பித்துச் சேர்ந்ததாகக் கூறி சர்ச்சை உருவானது. இதில் அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு சேர்ந்த இர்பான் என்ற மாணவர், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்தின் சார்பாக தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம்.