தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாளையொட்டி தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெல்லுஅள்ளி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை உணவுப்பொருள்களை தனது உதவியாளர் மூலம் அனுப்பிவைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள்: ஈழத் தமிழர்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கிய எம்.பி. - Ex cm karunanithi birthday
தர்மபுரி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஈழத் தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினார்.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்
இந்த உணவுப் பொருள்களை பெற்றுக்கொண்ட இலங்கை தமிழர்கள், நாடளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஏற்கனவே சென்ற வாரம் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த தும்பல்அள்ளி முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.