தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் பூக்கள் சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காரணமாக பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்த்துள்ளது. கடந்த வாரம் சாமந்தி பூ கிலோ ரூ.40-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மல்லிகை பூ தொடர்ந்து மூன்று நாள்களாக கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 800 ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ 300 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜாப்பூ கிலோ 120 ரூபாய்க்கும், 20 ரோஜா பூக்கள் கொண்ட கட்டு 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.