கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.எஸ்.ஆர்., கபினி அணைகளில் 60 ஆயிரம் கன அடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.