தமிழ்நாடு

tamil nadu

மீன் வியாபாரி அடித்துக் கொலை: 3 பேர் கைது

By

Published : Feb 5, 2021, 9:21 AM IST

தர்மபுரி: காரிமங்கலம் அருகே மீன் வியாபாரி அடித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கைதுசெய்த காவல் துறையினர், அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

fishmonger-beaten-to-death-3-arrested
fishmonger-beaten-to-death-3-arrested

தர்மபுரி அருகே பிடமனேரிப் பகுதியைச் சேர்ந்த செல்வம் (45), அவரது மனைவி சிவகாமி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்தனர். சிவகாமி தனது மூத்த மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் திருப்பதியுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூரில் சாமண்டபட்டியில் வசித்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி செல்வம் ஜெயப்பிரியாவின் வீட்டிற்குச் சென்று ஜெயப்பிரியா, அரிஸ்டாட்டில் என்ற இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கண்டித்து திட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரியா தனது ஆண் நண்பரான தேவிரஅள்ளியைச் சேர்ந்த அரிஸ்டாட்டிலிடம் தெரிவித்துள்ளார்.

அவர் தமது நண்பர்களான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை, சதீஷ்குமார் ஆகியோரின் உதவியுடன் செல்வத்தை ஏரியின்கீழுர் பாலம் அருகே கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த செல்வம், தமது ஊர்க்காரர்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் செல்வத்தை மீட்டு அவரது வீட்டில் கொண்டு சேர்த்துள்ளனர்.

மறுநாள் செல்வம் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் (பிப். 3) உயிரிழந்தார்.

இது குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், செல்வத்தின் மூத்த மகள் ஜெயப்பிரியா தமது ஆண் நண்பரான அரிஸ்டாட்டிலிடம் தனது தந்தை கண்டித்ததைக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரிஸ்டாட்டில் செல்வத்தை தமது நண்பர்கள் உதவியுடன் காரிமங்கலம் அருகே சரமாரியாகத் தாக்கியதில் கொலையுண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அரிஸ்டாட்டில், சின்னத்துரை, சதீஷ்குமார் ஆகிய மூவரையும் கைதுசெய்த காவல் துறையினர், மூவரையும் பாலக்கோடு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞரின் கண்களைக் கட்டி சராமரி தாக்குதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details