தருமபுரி அருகே நீட் தேர்வு நாளை எழுத இறந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் அச்சம்: மேலும் ஒரு தற்கொலை! - நீட் அச்சம்
19:17 September 12
நாளை(செப்.13) நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா(20), நீட் தேர்வு அச்சம் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் செவத்தாகவுண்டர் தெருவைச் சேர்ந்த டிராக்டர் வியாபாரி மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியின் மகன் ஆதித்யா. இவர் இரண்டாவது முறையாக நாளை சேலத்தில் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இன்று (செப்.12) வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலையில் (செப்.12) மதுரையில் மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக, ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாலையில் ஆதித்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.