தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று(மே.20) காலை தனது மகள் சாய்பிரநித்தாவை (4) அழைத்துக் கொண்டு இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பக்கம் சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதைக்கண்ட முருகேசன் சத்தமிட்டு மகளை காப்பாற்ற வேண்டும் என்று கிணற்றில் குதித்துள்ளார். தொடா்ந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தின் வந்து பார்த்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் இருவரும் வராதாதால், அரூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.