தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரூரில் விலைபோகாத நாட்டுக் கத்திரிக்காய் - அரூர் ஏரியில் கொட்டிய விவசாயிகள் - அரூர் ஏரியில் கத்தரிக்காயை கொட்டிய விவசாயிகள்

தருமபுரி: அரூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கத்திரிக்காய் சந்தையில் விலை போகாததால், விவசாயிகள் ஏரியில் கொட்டுவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

farmers
farmers

By

Published : May 6, 2020, 9:02 AM IST

தருமபுரி மாவட்டம் சித்தேரி, வள்ளி மதுரை, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், பெரும்பாலான விவசாயிகள் தக்காளி, கத்திரிக்காய், சுரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில், வள்ளி மதுரை, சித்தேரி உள்ளிட்டப் பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தில், நாட்டுக் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் கத்திரிக்காய் அறுவடை செய்யப்பட்டு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. தற்போது, கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

இதனால், அரூர் அடுத்த வள்ளி மதுரை, சித்தேரி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கத்திரிக்காயை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனாலும், விவசாயிகள் கத்திரிக்காயை அறுவடை செய்து அருகிலுள்ள அரூர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனர். அரூர் பகுதியில் நாட்டுக் கத்திரிக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், அறுவடை செய்த கூலி ஆட்களுக்கு கூட, கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மனமுடைந்த விவசாயிகள், அறுவடை செய்து டிராக்டரில் கொண்டு வந்த சுமார் ஒரு டன் கத்திரிக்காயை அரூர் பெரிய ஏரியில் கொட்டியது பார்ப்போரிடம் வேதனையை ஏற்படுத்தியது. கத்திரிக்காய் சாகுபடி செய்து, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஏக்கருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனால், தற்போது விலை இல்லாததால் கத்திரிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

டிராக்டரில் கொட்டப்படும் கத்தரிக்காய்

தற்போது, இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு முறையாக ஆய்வு மேற்கொண்டு அரசு தரப்பில் நிவாரணஉதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரூர் பெரிய ஏரியில் விவசாயிகள் கத்திரிக்காயை கொட்டியதையறிந்த அப்பகுதி மக்கள், இருசக்கர வாகனங்களில் வந்து மூட்டை மூட்டையாக கத்திரிக்காயை அள்ளிச் சென்றனர்.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details