கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் பகுதியிலிருந்து கர்நாடக மாநிலம் தேவன குத்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்ல பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், குழாய்கள் அமைக்கும் பணிக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த தேவனகுத்தி குழாய் பதிப்பு திட்டம் என்ற பெயரில் இருகூர் கிராம மக்களுக்கு கடிதம் வந்துள்ளது.
பெட்ரோலியம் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு! - விவசாயிகள் எதிர்ப்பு
தருமபுரி: பென்னாகரம் அருகே உள்ள கிராமங்களின் வழியாக பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.
farmers pettion
இதனையடுத்து, கிராம மக்கள் கடிதத்துடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் பகுதிக்கு குழாய் பதிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து மனு அளித்தனர். இந்த மனுவில், எங்கள் பகுதியில் ஏற்கனவே உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் விளை நிலத்தை இழந்துள்ளோம். மேலும், பெட்ரோலிய பொருட்களுக்கான குழாய் பதிப்பு பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தினால் நாங்கள் எங்கு சென்று பிழைப்பது எனக் குறிப்பிட்டுள்ளனர்.