தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி நதி நீர் விவகாரம் - போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை - karnataka

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு தருவதை விட்டுவிட்டு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

'காவிரி நீர்: மத்திய அரசு நடுநிலை நாடகம் ஆடுகிறது
'காவிரி நீர்: மத்திய அரசு நடுநிலை நாடகம் ஆடுகிறது

By

Published : Jul 20, 2021, 7:16 AM IST

தருமபுரி: தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வேலுச்சாமி நேற்று (ஜூலை 19) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், "தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய காவிரி நீரை கா்நாடக அரசு தொடர்ந்து வழங்காமல் சட்டத்திற்கு புறம்பாகவும் விதிகளுக்கு முரணாகவும் நான்கு அணைகளை கட்டி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீரை தேக்கிவைத்துள்ளது.

நடுநிலை நாடகம்

மூன்று போகம் சாகுபடி செய்த நிலை மாறி ஒரு போக விளைச்சல் கூட விளையாத நிலை உள்ளது. மேகதாது என்ற இடத்தில் எடியூரப்பா அணையை கட்டியே தீருவேன் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இதற்கு மத்திய அரசு பேசி தீர்த்துக் கொள்வோம் என்று சொல்கிறார்கள்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 205 டிஎம்சி தண்ணீர் வழங்க காவிரி நடுவர் ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு கர்நாடக அரசை கட்டாயப்படுத்தி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பிரித்து கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மத்திய அரசு நடுநிலை என்ற நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கிறது.

மருத்துவர் ராமதாஸும் அன்புமணியும் தொடர்ந்து பல ஆண்டுகளாக மேகதாது விவகாரத்தை கண்டித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து மேகதாது விவகாரத்தில் ஒன்றிணைந்து வலியுறுத்தி வருவதை தமிழ்நாடு உழவர் பேரியக்கம் பாராட்டுகிறது.

போராட்டம்

காவிரி நீர் பிரச்னையைப் பொருத்தவரை கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்கவேண்டும் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு தண்ணீரை தடுத்தால் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம் செய்யும் நிலை ஏற்படும் " என்று வேலுச்சாமி கூறினார்.

இதையும் படிங்க: மேகதாது: 'எதிர்ப்பை நேரில் வலியுறுத்த ஏற்பாடு செய்க' - புதுச்சேரி அதிமுக

ABOUT THE AUTHOR

...view details