தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலை இதை செய்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்.. சவால் விட்ட எம்.பி.செந்தில்குமார்!

MP Senthil Kumar: தொப்பூர் சாலை திட்டத்திற்குப் பலமுறை சந்தித்து வரைவு திட்ட அறிக்கை வழங்கப்பட்ட பின்பு தான் ரூபாய் 775 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

எம் பி செந்தில்குமார்
mp senthil kumar

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 10:33 PM IST

தருமபுரி :நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருந்து அமைக்கப்பட்ட மூன்று உயர் மின்விளக்கு கோபுரத்தை, தருமபுரி எம்.பி செந்தில்குமார் திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி செந்தில்குமார் பேசுகையில் “ அண்ணாமலை செல்வது நடைப் பயணம் கிடையாது.

அவரை எப்போதெல்லாம் டாக்டர்கள் அழைத்து பத்திரிகையாளர்களை மீது நீங்கள் கோபப்படுகிறீர்கள், டென்ஷனை குறைக்க வேண்டும், என்று சொல்கிறார்களோ அப்போது எல்லாம் 800 மீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் வரை ஒவ்வொரு ஊரிலும் நடக்கிறார். இதற்குப் பெயர் நடைப் பயணம் கிடையாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டது தான் நடைப்பயணம்.

ராமேஸ்வரத்தில் தொடங்கி நேற்று (ஜனவரி 08) தருமபுரி வரை அண்ணாமலை, சொல்லியது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா. கலைஞர் காப்பீடு திட்டம் வந்த பிறகு தான் பிரதமர் காப்பீடு திட்டம் வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவரது பாக்கெட்டில் இருந்து எந்த காசையும் எடுத்துக் கொடுக்கவில்லை. வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு 60% மாநில அரசு 40% நிதியைக் கொடுக்கிறது.

மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கும் திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்திற்கு முன்பு கலைஞர் காப்பீடு திட்ட முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு தான் இது இந்தியாவுக்கு முன்மாதிரியான காப்பீடு திட்டமாக விளங்கியது.

அரசியலிலிருந்து விலகுகிறேன்:'ஸ்வச் பாரத்' திட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவிக்கிறார். ஒரு கழிப்பறையைக் கூட 12 ஆயிரம் ரூபாயில் கட்ட முடியாது. அண்ணாமலைக்கு ஒரு சவாலாக வைக்கிறேன்.

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பத்து கழிவறைகள் என ஐம்பது கழிவறைகளைத் தேர்வு செய்து. அதில், 25 கழிவறைகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது பயன்படுத்தாமல் குடோனாக தான் இருக்கிறது.

அண்ணாமலைக்கு 3 சவால்களை வைக்கிறேன்,

  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தயாரா?
  • அண்ணாமலை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க தைரியம் இருக்கிறதா?
  • 2024 தேர்தலில் தருமபுரியில் பாஜக வேட்பாளர் டெபாசிட் வாங்கி காட்டட்டும்

இதனை ஏற்க அவர் தயாரா என கேள்வி எழுப்பிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பட்ட பின்பு பல முறை வலியுறுத்திய பிறகுதான், ரயில்வே திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. தொப்பூர் சாலை திட்டத்திற்குப் பலமுறை சந்தித்து வரைவு திட்ட அறிக்கை வழங்கப்பட்ட பின்பு தான் தொப்பூர் சாலைக்கு 775 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் எத்தனை முறை பகுதியில் ஆய்வு செய்து இருக்கிறார். நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஜய் மீது செருப்பு வீசிய விவகாரம்; நடிகர் விஷால் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details