தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாப்பிரெட்டிபட்டியில் மறுவாக்குபதிவா? - திமுக புகார் மனு!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாமகவினர் வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதால், மறுவாக்குப்பதிவு நடத்தும்படி திமுக சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிபட்டியில் மறுவாக்குபதிவா? திமுக புகார் மனு!

By

Published : Apr 19, 2019, 5:35 PM IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாமகவினர் வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக திமுக வழக்கறிஞர் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘நேற்று தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது, பாப்பிரெட்டிப்பட்டி அருகே நத்தமேடு பகுதியில் உள்ள பத்து வாக்குச்சாவடிகளை பாமகவினர் கைப்பற்றினர். பின்னர் ஒருவரே பல வாக்குகளைப் பதிவுசெய்துள்ளார். இதற்குத் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் துணை புரிந்துள்ளது.

திமுக சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு

சிசிடிவி கேமராவை திருப்பி வைத்து, கள்ள வாக்கிட்டு மொத்தமாக 90 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள நத்தமேடு, ஜல்லிபட்டி, அய்யம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பத்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இம்மனுவைப் பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் அலுவலர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என திமுக வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details