தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் - Dharmapuri Givt Medical College

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் நல மையம் கூடுதல் கட்டிடத்தை, கரோனா சிகிச்சை கட்டிடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் தாய் சேய் நல மையம் கூடுதல் கட்டிடத்தை, கரோனா சிகிச்சை கட்டிடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் தாய் சேய் நல மையம் கூடுதல் கட்டிடத்தை, கரோனா சிகிச்சை கட்டிடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

By

Published : Jun 17, 2021, 1:54 AM IST

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சைபெற்று செல்கின்றனர். பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் தாய்சேய் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் தாய்சேய் நல மையம் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு பணி முடிவுபெறும் நிலையில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தற்போது, கரோனா நோயாளிகளும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைபெற இடம் பற்றாக்குறையாக உள்ளதால், புதிய கட்டிடத்தை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்து கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்

ABOUT THE AUTHOR

...view details