தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையை வெட்டி தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

தர்மபுரி: அரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில், சாலையின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வு செய்தார்.

சாலையை வெட்டி எடுத்து தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
சாலையை வெட்டி எடுத்து தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

By

Published : Nov 11, 2020, 6:41 PM IST

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.117.22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுண்டாங்கிப்பட்டி முதல் மொரசப்பட்டி வரையிலான தார் சாலையினையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலின் படி சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் வகையில், சாலையின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, அதில் இருக்கும் தார் மற்றும் ஜல்லி கற்கள் கலவையை அளவுகோள் வைத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வு செய்தார்.

சாலையை வெட்டி எடுத்து தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

மேலும், அரூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.4.22 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலம், கிணறு, குடிமராமத்து பணிகள் மற்றும் வரட்டாறு அணை நீர்த்தேக்கத்தினையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அரூர் சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அப்போது உடனிருந்தனா்.

சாலையை வெட்டி தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

இதையும் படிங்க: கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நூதன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details