தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேளதாளம் முழங்க தாம்பூலத்தில் பத்திரிக்கை வைத்து வாக்களிக்க அழைப்பு: அடடே ஆட்சியர்! - election awarness

தர்மபுரி: இலக்கியம்பட்டியில் மேளதாளம் முழங்க தாம்பூலத்தில் பத்திரிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என தர்மபுரி ஆட்சியர் அழைப்புவிடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Mar 9, 2021, 4:35 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டியில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (மார்ச் 9) நடைபெற்றது.

ஜனநாயகத் திருவிழா

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கார்த்திகா மங்கள வாத்தியம் முழங்க பழங்கள் நிறைந்த சீர்வரிசை தட்டுடன் வாக்களிக்களிப்பதன் அவசியம் குறித்த அழைப்பிதழை வீடு வீடாகச் சென்று வழங்கினர்.

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்

மேலும் கடந்த தேர்தலில், மாவட்டத்தில் வாக்குப்பதிவு குறைவாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து இவர்கள் அப்பகுதிக்குச் சென்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details