தருமபுரி மாவட்டத்தில் ஒருவாரமாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்களால் மட்டுமே கரோனா வைரஸ் தொற்று பரவி வந்த நிலையில், தற்போது தொற்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் தொடர்பிலிருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
தருமபுரியில் கரோனா பாதிப்பு 700ஆக அதிகரிப்பு
தருமபுரி: மாவட்டத்தில் நேற்று (ஜூலை 26) ஒரே நாளில் 131 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு களப்பணியாளர்களாக பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாரண்டஅள்ளி பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை வைரஸ் தொற்றால் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் 301 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 396 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலக்கோடு ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் நேற்று (ஜூலை 26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.