தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கலில் காரியச் சடங்கிற்காக குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி - Dharmapuri man died

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு காரியச் சடங்கிற்காக குளிக்கச்சென்ற சம்பத் (33) என்ற கட்டடத் தொழிலாளி நீரில்மூழ்கி உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

man died

By

Published : Mar 22, 2019, 2:48 PM IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள முங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சம்பத் (33). கட்டடத் தொழிலாளி.

காரியச் சடங்கிற்காக நேற்று (மார்ச் 21) ஒகேனக்கலுக்குச் சென்ற இவர் தன்னுடைய உறவினர்களுடன் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினா்கள், இது குறித்து ஒகேனக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் மீட்புக் குழுவினா் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பத் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு சடலமாக கிடைத்த சம்பத்தின் உடல் உடற்கூறாய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காரியச் சடங்கிற்காக ஒகேனக்கலுக்கு குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் அடித்துச்சென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details